மஹாராஜா பூட்ஸ் லிமிடெட் நிறுவனம் நிர்வாகமற்ற சுயாதீன பணிப்பாளர்களாக இம்ரான் ஃபுர்கான் மற்றும் மெலங்கா தூல்வாலா ஆகியோரை நியமிப்பதாக அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த மறைந்த திரு. சிவசரணம் குகநாதனால் 1995 ஆம் ஆண்டு மஹாராஜா பூட்ஸ் புராடக்ட்ஸ் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. தமது வாடிக்கையாளர்களுக்கு அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற உயர்தர உணவுப் பொருட்களை விநியோகம் செய்வதோடு, உள்ளுர் விவசாயிகளை ஊக்குவிப்பதிலும் முன்னின்று செயற்படுகிறது. இன்று இந்நிறுவனம் தரம் மற்றும் புத்தாக்கத்தின் அடையாளமாக உள்ளது. அரிசி சார்ந்த மற்றும் மாவு சார்ந்த பொருட்கள், மசாலா பொருட்கள், மீன் சார்ந்த பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்களை விநியோகிப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துகிறது. இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள அதன் விநியோகஸ்தர்களின் வலையமைப்பின் ஊடாக, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் சேவையை வழங்குகிறது.
புதிய பணிப்பாளரான இம்ரான் தற்போது தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு தனிப்பட்ட தலைமைத்துவம், புவிசார் அரசியல், தொழில்நுட்பம், இடர் மேலாண்மை உள்ளிட்ட மூலோபாயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார். தற்போது ஆஸ்திரேலியாவின் Tresync இன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும்; இம்ரான், ஒத்துழைப்பை வளர்ப்பது, மக்கள் மற்றும் வணிகங்களை ஒன்றாக இணைப்பது, தொழில் கூட்டாண்மைகளை வளர்ப்பது என்பவற்றில் ஆர்வமாக உள்ள அதே நேரம், மேக்ரோ சமூக-பொருளாதார தொழில்நுட்ப உத்தி பற்றிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஒழுங்குமுறை மற்றும் தொழில்துறை அமைப்புகள், ஐடி/ஜிபிஎஸ், நிதி, பொருட்கள், ஊடகம் மற்றும் தொழில்முறை சேவைகள் போன்றவற்றில் அவர் வகித்த சிரேஷ்;ட முகாமைத்துவ மற்றும் பணிப்பாளர் பதவிகள் அவர் அடைந்த சாதனைகளுக்கான சான்றுகளாகும். அவுஸ்திரேலியாவின் கிரேட்டர் டான்டெனாங் நகரின், இன்டர்பெயித் நெட்வொர்க்கின் (IFN) சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளராகவும் உள்ளார். இம்ரான் முன்னர் டிரேட் ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிஎல்சியின் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் பதவி வகித்தார். மேலும் SLASSCOM மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றினார். இம்ரான், CPA Australia> CIMA UK பயின்றிருப்பதோடு ஆஸ்திரேலியாவில் MBA பட்டத்தையும், UK இல் நிலையான செயல்திறன் முகாமைத்துவத்திற்காக BA பட்டத்தையும் பெற்றவராவார்.
மற்றைய புதிய பணிப்பாளரான மெலங்கா நிதி மேலாண்மை மற்றும் மூலோபாயத்தில் நிபுணத்துவம் பெற்ற, நிதித்துறையில் 23 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராவார். தற்போது அவர் சிஸ்வேர்ல்ட் பிஎல்சி இல் நிர்வாகமற்ற சுயாதீன பணிப்பாளராக பணியாற்றுகிறார். மஹாராஜா பூட்ஸில், தணிக்கைக் குழு மற்றும் தொடர்புடைய பகுதிகளின் பரிவர்த்தனைகள் மறுஆய்வுக் குழுவின் தலைவராக, முக்கியமான குழு செயல்பாடுகளை மெலங்கா மேற்பார்வையிடுகிறார். அதுமட்டுமல்லாது அவர் Omee Products (Pvt) Ltd மற்றும் A M D Holdings (Pvt) Ltd ஆகியவற்றின் பணிப்பாளராகவும் உள்ளார். முன்னர் மெலங்கா Arpico Insurance PLC இல் நிதி மற்றும் செயல்பாடுகளின் தலைமை அதிகாரி/பொது முகாமையாளராக இருந்தவராவார், மேலும் X-Ont Software (Pvt) Ltd. மற்றும் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி என்பற்றில் நிர்வாகப் பதவிகளையும் வகித்தாh.; அவர் கார்டிஃப் மெட்ரோ பொலிட்டன் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றிருப்பதோடு CIMA UK இன் இணை உறுப்பினராகவும் உள்ளார்.
2015 இல் திரு.குகநாதன் அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது துணைவியார் திருமதி தவமலர் குகநாதன் (யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்தவர்) வர்த்தகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார், பெண்ணொருவரின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் மஹாராஜா பூட்ஸ் நிறுவனம், எதிர்காலத்தில் வணிக விரிவாக்கத்திற்கு நிதியளிப்பதற்காக புதிய பங்கு மூலதனத்தை திரட்ட பரிசீலித்து வருகிறது.